எனினும், இந்தக் காதல் தொடர்பாக அனிருத் அல்லது காவ்யா மாறன் தரப்பில் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே, நடிகர் Y.G. மகேந்திரன் முன்னதாக இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவித்திருந்தது இந்தக் கூற்றுகளுக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அனிருத் – காவ்யா மாறன் திருமணம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இருவரும் கிரீஸில் (Greece) டெஸ்டினேஷன் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், நவம்பர் 10, 2026 திருமணத் திகதியாக இருக்கலாம் என்றும் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், திருமணத் திகதி மற்றும் இடம் தொடர்பான தகவல்கள் இதுவரை அனிருத், காவ்யா மாறன் அல்லது அவர்களது குடும்பத்தினரால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், சில தகவல்களில் நவம்பர் 10 என்றும், வேறு சிலவற்றில் நவம்பர் 11 என்றும் குறிப்பிடப்படுவதால், இந்தத் தகவலை உறுதிப்படுத்தப்படாத செய்தியாகவே கருத வேண்டும்.
.jpeg)