நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், குற்றச்செயல்களுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 20 பேர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட நடவடிக்கையின் போது நாடு முழுவதும் சுமார் 25,482 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேகத்தின் அடிப்படையில் 461 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் குற்றச்செயல்களுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 20 பேரும் அடங்குகின்றனர்.
மேலும், நீதிமன்றத்தால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 231 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 116 பேரும் இந்த நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குடிபோதையில் வாகனம் செலுத்திய 78 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்திய சம்பவங்களுடன் தொடர்புடைய 89 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக, போக்குவரத்து சட்டங்களை மீறியமை மற்றும் ஏனைய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3,917 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)