குற்றச்சாட்டுகள் தொடர்பில் சாகர காரியவசம் கைது!!

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபர் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (10) மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாகவும், பொதுமக்கள் மத்தியில் ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகவும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.