புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளர் முக்கிய அறிவிப்பு!!

2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் நேற்று (09) நடைபெற்றது.

இம்முறை பரீட்சைக்கு மொத்தமாக 2,94,089 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

அவர்களில் சிங்கள மொழி மூலம் 2,20,366 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 73,723 மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த பின்னர், பரீட்சை முடிவுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.