அஜித்தின் அடுத்த 3 படங்கள் உறுதி? ரசிகர்களுக்கு வெளியாகிய புதிய தகவல்.



 குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு அஜித்தின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. எனினும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பட்ஜெட் மற்றும் தயாரிப்பு தொடர்பான சில காரணங்களால் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு தாமதமாகி வந்த நிலையில், தற்போது இப்படத்தை அஜித் தானே தயாரிக்கும் திட்டம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் ஆரம்பமாகவுள்ளதாகவும், அதனை டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மங்காத்தா 2’ திரைப்படத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னர், இயக்குநர் சிவா இயக்கும் புதிய திரைப்படத்தில் அஜித் நடிக்க உள்ளதாகவும், அதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு கோடை காலத்திற்குப் பின்னர் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் பந்தய நடவடிக்கைகளில் சில காலம் கவனம் செலுத்தியிருந்த அஜித், தற்போது தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க திட்டமிட்டுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.