2026 ஆம் ஆண்டிற்கான அரசுப் பாடசாலைகள் மற்றும் அரசின் அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை மற்றும் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான கால அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (ஆகஸ்ட் 7) நிறைவடைகிறது.
முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் செப்டம்பர் 2 ஆம் திகதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசுப் பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் 7 ஆம் திகதி, திங்கட்கிழமை ஆரம்பமாகும். 2026 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை டிசம்பர் 4 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர்தர) பரீட்சை ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
.jpeg)