அம்பகமுவ ஓயா பெருக்கெடுத்து வீதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்ததால், குறித்த வீதி முற்றாக நீரில் மூழ்கியது.
இதன்போது, கினிகத்தேனையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கியது.
நிலவிய ஆபத்தையும் பொருட்படுத்தாமல், அம்பகமுவ பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவினர் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அவர்கள் லொறி ஒன்றை பேருந்துக்கு அருகில் கொண்டு சென்று, பேருந்தில் இருந்த பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர். பின்னர், கெப் ரக வாகனத்தின் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கிய பேருந்தையும் மீட்டெடுத்தனர்.
இளைஞர்களின் இந்த துணிச்சலான மற்றும் மனிதநேயமான செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது

