வெல்லவாய – மொனராகலை வீதியின் கும்புக்கன, களு பாலம் பகுதியில் வெல்லவாய நோக்கிப் பயணித்த டிப்பர் வண்டியொன்று எதிர்த் திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின்போது உழவு இயந்திரத்தில் 10 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் எட்டுப் பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், அவர்களில் ஐவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் தொடங்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த ஏனைய மூவரும் மொனராகலை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வண்டியின் சாரதி மற்றும் உழவு இயந்திரத்தின் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
