ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைத் தளர்த்துவதற்காக இலஞ்சப் பணத்தை கோரிப் பெற்றுக்கொண்டதாகக் கூறியே, இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இரு பொலிஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபரிடம் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் முழுமையான அளவு தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், 70 மில்லிகிராம் ஹெரோயின் தொடர்பில் மாத்திரம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து குறைந்த தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கும், எதிர்காலத்தில் எவ்வித இடையூறும் இன்றி செயற்பட அனுமதிப்பதற்குமாகவே இலஞ்சப் பணம் கோரப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த ஆகஸ்ட் 17 ஆம் திகதி பொலிஸ் பரிசோதகர் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்திலும், பொலிஸ் கான்ஸ்டபிள் கல்முனை பகுதியிலும் இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் சந்தேக நபர்கள் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
