ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (21) காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடையதாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, இன்று காலை அவர் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விசாரணை தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.