காரைநகர் வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் இன்று (24) கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடற்கரைப் பகுதிக்கு
சென்ற பொதுமக்கள், கடலில் சடலம் ஒன்று மிதந்து கரையொதுங்கியிருந்ததை அவதானித்ததையடுத்து, உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
கரையொதுங்கிய சடலம் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
.jpeg)