மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் கைது; 204 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

 


அஹுங்கல்ல, கல்போக்க பகுதியில் 204 கிராம் 660 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஹுங்கல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 204 கிராம் 660 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.