கொழும்பு 09 பகுதியில் உள்ள 14 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, குறித்த சிறுவன் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில், மேலும் சில சிறுவர்களுடன் இணைந்து சுற்றுப்புறக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது, சிறுவன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
