புலத்சிங்கள உடுகலகந்த விபத்து: சாரதி உட்பட 14 பேர் காயம்....

 


களுத்துறை மாவட்டம், புலத்சிங்கள உடுகலகந்த அமரகெதர பகுதியில் இன்று (07) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று உடுகலகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் 6 பேர் ஹொரணை மாவட்ட வைத்தியசாலையிலும், 8 பேர் புலத்சிங்கள பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 12 பேர் பெண்கள் எனவும், வேன் சாரதி உட்பட மேலும் இரு ஆண்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.