தமிழ் திரையுலகைத் தாண்டி இந்திய சினிமாவிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தை உருவாக்கியுள்ள அனிருத், தற்போது பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.
ஷாருக்கானின் ‘கிங்’, ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’, ‘தர்மன்’, அல்லு அர்ஜுன்–லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம், நானியின் ‘தி பாரடைஸ்’, ‘AK 64’ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அண்மைய பேட்டி ஒன்றில் அனிருத்திடம், திரைப்படப் பணிகளில் எப்போதாவது அதிக அழுத்தத்தை உணர்ந்திருக்கிறீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அனிருத், இசையமைப்பிற்காக தனக்கு மிகப்பெரிய சம்பளம் வழங்கப்படுவதாகவும், பணியில் அழுத்தம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால் அந்த சூழலில் தொடர்ந்து இருக்காமல் விலகிவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது இசையின் நோக்கம் குறித்தும் பேசிய அவர், ஒரு திரைப்படத்தை பார்க்க 10 பேர் திரையரங்கிற்கு வந்தால், தனது பாடல்கள் மற்றும் இசையின் மூலம் அந்த எண்ணிக்கையை 13 அல்லது 14 ஆக அதிகரிக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என தெரிவித்துள்ளார்.
அனிருத்தின் இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
.jpeg)