அஜித் மற்றும் விஜய் இருவரும் ‘மங்காத்தா’, ‘வேலாயுதம்’ ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பு காலகட்டத்தில் சந்தித்ததாகவும், அதன் பின்னர் இருவருக்கும் இடையே நல்ல நட்பு உருவானதாகவும் கூறப்படுகிறது.
அஜித் தனது வீட்டில் விஜய்க்கு பிரியாணி செய்து விருந்தளித்ததாகவும், அதற்கு விஜய் அஜித்துக்கு கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கியதாகவும் திரையுலகில் முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், அஜித் நடித்த ‘மங்காத்தா’ திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் அவரது படக்குழுவினருக்காக விஜய் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது வெங்கட் பிரபுவிடம் பேசிய விஜய், படத்தில் அர்ஜுன் நடித்திருந்த கதாபாத்திரத்தை தன்னிடம் கேட்டிருக்கலாம் என்றும், அஜித்தின் 50ஆவது படத்திற்காக அந்த கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பேன் என்றும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைக் கேட்ட வெங்கட் பிரபு, “உண்மையாகவா அண்ணா?” என கேட்டதாகவும், அதற்கு விஜய், “உண்மையாகத்தான், நானே நடித்திருப்பேன்” என பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சுவாரஸ்யமான தகவல் தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அஜித் மற்றும் விஜய் இணைந்து நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
.jpeg)