டீசல் விலை உயர்ந்தாலும் பாடசாலை போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்காது – சங்கம் அறிவிப்பு!


டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைக்கு பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துக் கட்டணங்களை அதிகரிக்கப் போவதில்லை என அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வால் பாடசாலை போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுத்துச் செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், பெற்றோருக்கு மேலதிக பொருளாதாரச் சுமையை ஏற்படுத்த விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டீசல் விலையை அரசாங்கம் ஓரளவுக்குக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்காலத்தில் டீசல் விலை குறைக்கப்பட்டால், அதன் மூலம் கிடைக்கும் நிவாரணத்தை உடனடியாக மாணவர்களின் பெற்றோருக்கு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.