வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா அதிரடி.


ஹோர்முஸ் நீரிணையில் மூன்று வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த கப்பல் தாக்குதல்களுக்கு ஈரானே பொறுப்புக்கூற வேண்டும் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அந்த குற்றச்சாட்டுகளை ஈரான் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

தாக்குதலில் மூன்று வணிகக் கப்பல்களும் சேதமடைந்துள்ள போதிலும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈரானுக்கு வழங்கப்பட்டிருந்த எண்ணெய் ஏற்றுமதி தடைகளுக்கான விலக்கை அமெரிக்கா இரத்து செய்துள்ளதுடன், அந்நாட்டின் மீது பொருளாதார அழுத்தத்தையும் மேலும் அதிகரித்துள்ளது.

இதேவேளை, கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு கட்டார் மற்றும் சவூதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் தங்களுக்குச் சொந்தமான கப்பல்களும் சேதமடைந்துள்ளதாக அவை குறிப்பிட்டுள்ளன.