கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வெளிநாட்டு செலாவணி வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள இந்த சாதகமான வளர்ச்சியை கருத்தில் கொண்டு, 2026 ஆம் ஆண்டிற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை என்ற இலக்கை அடைய முடியும் என நம்புவதாகவும் ருவன் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
