யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!



 யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர் கொழும்புத்துறையைச் சேர்ந்த தங்கவடிவேலு பிரபாகரன் (42) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

கிடைத்த தகவல்களின்படி, அவர் நீண்டகாலமாக புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தையடுத்து அவரது உடல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, சட்ட மருத்துவ மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த உயிரிழப்பு தொடர்பான மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார். மேலும், சம்பவம் குறித்து தொடர்புடைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.