OPEC+ உற்பத்தி அதிகரிப்பு!!

 


உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, OPEC+ அமைப்பு ஆகஸ்ட் மாதத்திற்கான கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்திருப்பது குறிப்பிடப்படுகிறது.

அதேவேளை, ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதால், உலக சந்தையில் எண்ணெய் விநியோகம் அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மாற்றங்களின் விளைவாக, பிரண்ட் (Brent) கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 71.78 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது. அதேபோல், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 68.48 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை சரிவு, எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.