இன்று முதல் புதிய பேருந்து கட்டணம் அமல்!!!

 


வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின் அடிப்படையில், புதிய பேருந்து கட்டணங்கள் இன்று (06) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) வழங்கிய அனுமதியின் படி, பேருந்து கட்டணங்கள் 12% முதல் 20% வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இதுவரை ரூ.30 ஆக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.34 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், சொகுசு பேருந்துகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளின் கட்டணங்களும் புதிய திருத்தத்துக்கு ஏற்ப அதிகரிக்கப்பட்டுள்ளன.

புதிய கட்டண முறை தொடர்பாக பேருந்து ஊழியர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களை (Ticket Machines) உடனடியாக புதுப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், புதிய கட்டணங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் இன்று முதல் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களை முழுமையாக புதுப்பிக்க மேலும் இரண்டு நாட்கள் வரை தேவைப்படலாம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.