ஆரோக்கியமான வாழ்க்கையை நாடும் அசைவ உணவு விரும்பிகளுக்கு மீன் முக்கியமான தேர்வாகும். மீனில் உள்ள உயர்தர புரதச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. பொதுவாக சால்மன் போன்ற விலை உயர்ந்த மீன்களில்தான் அதிக ஊட்டச்சத்து இருப்பதாக பலர் நினைத்தாலும், உண்மையில் மலிவான விலையில் கிடைக்கும் மத்தி (Sardine) மற்றும் கானாங்கெளுத்தி (Mackerel) போன்ற மீன்கள் அதே அளவு அல்லது அதைவிட அதிக நன்மைகளை வழங்குகின்றன என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வாரத்திற்கு இரண்டு முறை இந்த சத்துக்கள் நிறைந்த மீன்களை உணவில் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்தை பெரிதும் மேம்படுத்தும்.
முடி உதிர்வை குறைக்கும் இயற்கை தீர்வு
முடி உதிர்வு இன்று பலருக்கும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் B12 முடி வேர்க்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகின்றன.
இவை:
- தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன
- முடி வேர்களை வலுப்படுத்துகின்றன
- முடி உதிர்வை குறைக்க உதவுகின்றன
- கூந்தல் அடர்த்தியாக வளர உதவுகின்றன
எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு பலம்
இந்த மீன்களில் உள்ள வைட்டமின் D, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளையும் முடி வேர்களையும் வலுப்படுத்துகின்றன. மேலும், மூட்டு வலி மற்றும் ஆர்த்ரைடிஸ் போன்ற பிரச்சனைகள் வருவதற்கான அபாயத்தையும் குறைக்க உதவுகின்றன.
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்:
- கெட்ட கொழுப்பை (LDL) குறைக்கிறது
- நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கிறது
- இரத்த நாளங்களில் கட்டி உருவாகுவதைத் தடுக்கும்
- உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்
- மாரடைப்பு அபாயத்தை குறைக்கும்
மூளை மற்றும் நினைவாற்றல் மேம்பாடு
இந்த மீன்களில் உள்ள சத்துக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின்:
- நினைவாற்றலை அதிகரிக்கிறது
- மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது
குறைந்த விலையில் அதிக ஆரோக்கியம்
மிக முக்கியமான நன்மை என்னவென்றால், இந்த மீன்கள் மிகக் குறைந்த விலையில் எளிதாக கிடைக்கின்றன. எனவே குறைந்த செலவில் அதிக ஊட்டச்சத்து பெற விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாகும்.