குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (06) நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
எனினும், அங்கு நிலவிய அமைதியற்ற சூழ்நிலை காரணமாக விசாரணை நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் சில நாட்களில் அதிகாரிகள் குழு மீண்டும் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு சென்று சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்கும் என நிமல் ஜி. புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
.jpeg)