சிறைச்சாலை மோதலில் மேலும் ஒரு உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு.




 நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து, நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 07 சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.