உலக எண்ணெய் சந்தையில் மீண்டும் விலை உயர்வு – காரணம் என்ன?

 


ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக உலக எண்ணெய் விநியோகம் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதே இதற்கான முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

இதன்படி, இன்று காலை 6.15 மணி நிலவரப்படி, WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.04 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இது 2.27 சதவீத உயர்வாகும்.

அதேவேளை, சர்வதேச சந்தையில் முக்கிய குறியீடாகக் கருதப்படும் Brent ரக கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 75.78 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இது 2.18 சதவீத அதிகரிப்பாக பதிவாகியுள்ளது.

மேலும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் Murban ரக கச்சா எண்ணெய் விலையும் உயர்வை பதிவு செய்துள்ளது. அதன் விலை பீப்பாய் ஒன்றுக்கு 68.97 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதுடன், இது 3.43 சதவீத வளர்ச்சியாகும்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அரசியல் மற்றும் இராணுவ பதற்றங்கள் தொடர்ந்து நீடித்தால், எதிர்காலத்தில் உலகளாவிய எண்ணெய் விலைகளில் மேலும் தாக்கம் ஏற்படக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.