இதுவரை இலங்கையில் மொத்தமாக 63,835 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெங்கு நோய் பரவல் தொடர்ந்தும் காணப்படுவதால், பொதுமக்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
டெங்கு நோய் அறிகுறிகள் காணப்பட்டால் தாமதமின்றி மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம் எனவும் சுகாதாரப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
