மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (19) முற்பகல் முதல் அவசர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த நீர் விநியோகத் தடை நாளை (20) முற்பகல் 8.00 மணி வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடவத்தை பகுதியில், மத்திய அதிவேக வீதிக்கு அருகில் அமைந்துள்ள பிரதான நீர் விநியோக குழாயில் ஏற்பட்ட திடீர் கசிவு காரணமாக இந்த தடை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசிய பழுது நீக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்றும், பணிகள் நிறைவடைந்ததும் நீர் விநியோகம் வழமைப்படுத்தப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
