மாம்பழத்தை தயிர், காரமான உணவுகள், குளிர்பானங்கள், சில பழங்கள் மற்றும் பால் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடாமல் இருப்பது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தயிருடன் மாம்பழம் சேர்த்து சாப்பிடுவது உடலில் வெப்ப–குளிர்ச்சி சமநிலையை பாதித்து செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். அதேபோல் காரமான உணவுகளுடன் சேர்த்தால் வயிற்று எரிச்சல் மற்றும் அசிடிட்டி ஏற்படும் அபாயம் உள்ளது.
சோடா போன்ற செயற்கை குளிர்பானங்களுடன் மாம்பழம் சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை திடீரென உயர்த்தி வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தலாம். பாகற்காய் போன்ற கடுமையான சுவை கொண்ட உணவுகளுடன் சேர்ப்பது செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி போன்ற புளிப்பு பழங்களுடன் மாம்பழம் சேர்த்து சாப்பிடுவது உடலின் pH சமநிலையை பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் மாம்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் குறைந்தது 30 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது.
அதேபோல் அதிக கொழுப்புள்ள உணவுகள் மற்றும் பால் பொருட்களுடன் மாம்பழம் சேர்த்து சாப்பிடுவது செரிமானத்தை மெதுவாக்கி வயிறு உப்புசத்தை ஏற்படுத்தலாம்.
மொத்தத்தில், மாம்பழத்தை தனியாகவும் சரியான இடைவெளியுடனும் உணவில் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு சிறந்தது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
.jpeg)