எரிபொருள் விலை உயர்ந்திருந்தாலும், தற்போதைக்கு பஸ் கட்டணங்களில் எந்தவித உயர்வும் இருக்காது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள பஸ் கட்டண கணக்கீட்டு முறையின் அடிப்படையில் மட்டுமே எதிர்காலத்தில் கட்டண மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், எரிபொருள் விலை மாற்றங்களின் காரணமாக பஸ் கட்டணங்களில் திருத்தம் செய்ய வேண்டுமானால், அந்த மாற்றம் குறைந்தபட்சம் 4 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
