ர் கட்டணம் குறைந்த அளவில் அதிகரிக்கும் என அமைச்சர் அறிவிப்பு.



 நீர் கட்டணம் மிகச் சிறிய அளவில் உயர்த்தப்படும் என வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (02) நடைபெற்ற நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

மின்சாரக் கட்டண மாற்றங்களுக்கு ஏற்ப நீர் கட்டணங்களிலும் மாற்றம் ஏற்படுவது இயல்பானது எனவும் அவர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், மின்சாரக் கட்டண உயர்வில் சுமார் 12 சதவீத தாக்கம் மட்டுமே நீர் கட்டணத்தில் பிரதிபலிக்கிறது என்றும், அது 18 சதவீத அளவுக்கு மாற்றம் காணக்கூடும் எனவும் தெரிவித்தார்.

நீர் கட்டணம் அதிகரிக்குமா என மக்கள் கேள்வி எழுப்புகின்ற நிலையில், இந்த மாற்றம் மிகச் சிறிய அளவிலேயே இருக்கும் என்றும், ஒவ்வொரு யூனிட்டிற்கும் ஏற்படும் மாற்றம் குறைந்ததாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மின்சாரக் கட்டண ஏற்ற இறக்கங்கள் நேரடியாக நீர் கட்டணத்தை பாதிக்கும் காரணமாக இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.