ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை அல்லது மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், தெற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், அதேபோல் திருகோணமலை மாவட்டம் ஆகிய இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் இடைக்கிடையே பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளத
