வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி – ரூ.4.9 மில்லியன் இழப்பு: சந்தேகநபர் கைது.

 


வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ஒருவரிடம் ரூ.4,990,000 மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அந்த விசாரணைகளின் தொடர்ச்சியாக, நேற்று (16) மதியம் இந்த மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் இந்திய குடியுரிமை பெற்ற இலங்கை நபராகவும், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவராகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிதி மோசடி சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி கோட்ட விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.