செக் குடியரசில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘ஒஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்’ தடகள சாம்பியன்ஷிப் தொடரில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க மிகச் சிறந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் அவர் 86.57 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்த சிறப்பான வெற்றி மூலம் அவர் சர்வதேச தடகள அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
.jpeg)