நாள் முழுவதும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க, காலையில் வெறும் 15 முதல் 20 நிமிடங்கள் எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இந்த பயிற்சிகள் உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றன.
- நடைப்பயிற்சி (Walking)காலையில் திறந்த வெளியில் அல்லது மொட்டை மாடியில் 15 முதல் 20 நிமிடங்கள் வேகமாக நடப்பது இரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலை புத்துணர்ச்சியாக்கும். காலை சூரிய ஒளி மற்றும் குளிர்ந்த காற்று கூடுதல் ஆற்றலை வழங்கும்.
- சூரியநமஸ்காரம் (Surya Namaskar)யோகாவின் 12 நிலைகளைக் கொண்ட இந்த பயிற்சியை 5 முதல் 10 முறை செய்வது முழு உடலுக்கும் பயிற்சியாக அமையும். இது நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.
- ஜம்பிங் ஜாக்ஸ் (Jumping Jacks)கைகளை மற்றும் கால்களை ஒரே நேரத்தில் விரித்து குதிக்கும் இந்த கார்டியோ பயிற்சியை 20 முறைகள் வீதம் 3 செட்கள் செய்யலாம். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- ஸ்குவாட்ஸ் (Squats)நாற்காலியில் அமர்வது போல கீழே இறங்கி மீண்டும் எழுந்து நிற்பது கால்கள், இடுப்பு மற்றும் வயிற்றுத் தசைகளை வலுப்படுத்தும். 10–15 முறை செய்யலாம்.
- புஜங்காசனம் (Bhujangasana) & குழந்தை ஆசனம் (Child’s Pose)முதுகு வலியை குறைக்கவும், உடல் இறுக்கத்தை தளர்த்தவும் உதவும் முக்கிய யோகாசனங்கள். இரவு தூக்கத்துக்குப் பிறகு உடலுக்கு இவை மிகச் சிறந்த ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்.
- பின்கால் உதை பயிற்சி (Butt Kicks)நின்ற இடத்தில் ஓடுவது போல கால்களை பின்புறம் தொடும் வகையில் செய்யும் இந்த பயிற்சி 1–2 நிமிடங்கள் செய்தால் இதயத் துடிப்பு சீராகும்.
- கை, கால், கழுத்து சுழற்சி பயிற்சி (Rotation Exercises)கழுத்து, கைகள், இடுப்பு மற்றும் கணுக்கால்களை மெதுவாக சுழற்றுவது மூட்டு இறுக்கத்தை குறைத்து உடலை சுறுசுறுப்பாக்கும்.