இரவு எண்ணெய் பயன்பாடு மற்றும் கவனிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள்.



முடி வறண்டு, ரஃப் தன்மையுடன் இருப்பவர்கள் பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை இரவு முழுவதும் தலையில் தடவி வைத்தால் முடி மென்மையாக மாற உதவலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.

அதேபோல், அதிகமாக முடி உதிரும் பிரச்சினை உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு விளக்கெண்ணெய் கலந்து பயன்படுத்தினால் புதிய முடி வளர்ச்சிக்கு உதவலாம் என கூறப்படுகிறது. கறிவேப்பிலை, மருதாணி அல்லது நெல்லிக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் வீட்டுத் தயாரிப்பு எண்ணெய்களும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இரவு நேர எண்ணெய் பயன்பாட்டில் சில கவனிக்க வேண்டிய அம்சங்கள் உள்ளன. எண்ணெய் தடவிய பின் முடியை மிகவும் இறுக்கமாக கட்டுவது அல்லது ரப்பர் பேண்ட் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். இதனால் முடி வேர்கள் பலவீனமடைந்து முடி உதிர்வு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், எண்ணெய் தடவிய உடனே சீவுவது தவிர்க்கப்பட வேண்டும். அப்போது முடி மென்மையாக இருப்பதால் அதிகமாக உடைப்பு ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது. தலையணை மீது பழைய துணி போடுவது அல்லது கவரை அடிக்கடி மாற்றுவது பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் எண்ணெய் முகத்தில் பருக்கள் உருவாகக் காரணமாக இருக்கலாம்.

சிலர் சைனஸ் அல்லது சளி பிரச்சினை உள்ளவர்கள் இரவு முழுவதும் எண்ணெய் வைக்காமல், குளிப்பதற்கு முன்பு 30 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்துவது நல்லது எனவும் கூறப்படுகிறது.

காலையில் வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலசுவது மற்றும் மென்மையான ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்துவது முடி ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் எனவும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.