இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 47,530 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (22) நள்ளிரவு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஜூன் மாதத்தில் மட்டும் 13,689 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மொத்த நோயாளர்களில் 51.90 சதவீதம் மேல் மாகாணத்திலும், 16.18 சதவீதம் தென் மாகாணத்திலும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 112 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிக ஆபத்து பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
புதிய தரவுகளின்படி, கொழும்பு மாவட்டத்தில் 9,983 பேரும், கம்பஹாவில் 8,809 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 3,446 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
.jpeg)