பூனாவையில் பயங்கர லொறி விபத்து – இருவர் உயிரிழப்பு.

 


யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவை, கல்கந்தேகம பகுதியில் இன்று (17) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாக பூனேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுரைச்சோலை பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி மீனவர்கள் குழுவை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில் நிறுத்தப்பட்டிருந்த போது, பின்னால் வந்த உரம் ஏற்றிய மற்றொரு லொறி அதன்மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மோதலின் தாக்கத்தில் உரம் ஏற்றிய லொறி, மீனவர்கள் இருந்த லொறியின் மீது கவிழ்ந்ததால் விபத்து மேலும் தீவிரமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 43 வயதுடைய மீனவர்கள் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த நபரும் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.