நீதித்துறையில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணும் நோக்கில் அவசர பாராளுமன்ற விவாதம் ஒன்றை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்காக கையெழுத்திடப்பட்ட கடிதம் இன்று (23) பாராளுமன்றத்தில் வைத்து சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றம் தலையிட்டு விரைவான தீர்வுகளை வழங்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.