ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு வழக்குகளில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன, இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகள் தொடர்பான தீர்ப்பு இன்று (09) அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த நீதிமன்ற நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
