சபாநாயகர் தலைமையில் இலங்கை நாடாளுமன்றம் இன்று தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இன்றைய அமர்வில் பல முக்கிய கேள்வி நேரங்களும் சட்ட ஒழுங்கு விவாதங்களும் இடம்பெறவுள்ளன.
முற்பகல் 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்ட 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதனைத் தொடர்ந்து முற்பகல் 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர் 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகள் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை முத்திரைத் தீர்வை, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு, உற்பத்தித் தீர்வை, பெறுமதி சேர் வரி உள்ளிட்ட பல முக்கிய சட்ட கட்டளைகள் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் விவாதிக்கப்பட்டு அங்கீகாரம் பெறவுள்ளது.
Parliament of Sri Lanka இன் இன்றைய அமர்வு தற்போது நேரடி ஒளிபரப்பாக நடைபெற்று வருகிறது.
.jpeg)