பிங்கிரிய குடும்பத் தகராறு கொலை சம்பவம் – கணவன் கைது செய்யப்பட்ட பின் உயிரிழப்பு.



பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படிவெல பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறு கொடூரமான சம்பவமாக மாறி, மனைவி ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 61 வயதுடைய, படிவெல பகுதியில் வசித்து வந்த பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணைகளின் படி, நேற்று (10) காலை தம்பதியினருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததையடுத்து இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்னர் 59 வயதுடைய கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும், கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவர் பிங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.