அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானை கடுமையாக தாக்குவதாகவும், போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தை தாமதப்படுத்தியதே இந்த நடவடிக்கைக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அமெரிக்க படைகள் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் மையங்கள் மற்றும் இராணுவ தளங்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலடியாக ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களில், அதே பகுதிகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீண்டும் இலக்காகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரலில் எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் இந்த புதிய தாக்குதல்கள் கடுமையாக சவாலுக்கு உள்ளாக்கியுள்ளன.
மேலும், ஹோர்முஸ் நீரிணை அருகே ஈரானின் தெற்குப் பகுதிகளில் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், அங்கு அமெரிக்க தாக்குதல்கள் நடைபெற்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, ஹோர்முஸ் நீரிணை வழியாக சென்ற இரண்டு எண்ணெய் கப்பல்களும் தாக்கப்பட்டதாக கூறியுள்ளது. ஆனால் இதற்கு இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.
இதையடுத்து ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், குவைட் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
.jpeg)