இன்று காலை ரயில் மோதல் விபத்து – இருவர் உயிரிழந்த சோகம்.



 சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த துயரச் சம்பவம் இன்று (09) காலை இடம்பெற்றுள்ளது.

கப்புவத்தை மற்றும் கந்தானை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட ரயில் கடவையில் இந்த மோதல் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.