2018.09.09 அன்று நாரங்கஸ்பிட்டிய, கிரிந்திவெல பகுதியில் வசித்த இந்த முன்னாள் இராணுவ வீரர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் புலனாய்வுப் பிரிவு இந்த விசாரணைகளை முன்னெடுத்து வந்தது.
இதன் தொடர்ச்சியாக, நேற்று (08) நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரன்பொகுணுகம பகுதியில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 47 வயதுடைய நிட்டம்புவ, ரன்பொகுணுகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான சிறிய ரக துப்பாக்கி ஒன்றும், அதற்கான 5 தோட்டாக்களும், T-56 ரக தோட்டாக்கள் 4, 9 மில்லிமீற்றர் தோட்டாக்கள் 8 மற்றும் 12 போர் ரக தோட்டாக்கள் 2 ஆகியனவும் புலனாய்வு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
.jpeg)