இந்த தாக்குதலின் போது தலைநகர் தெஹ்ரான், தப்ரிஸ் மற்றும் இஸ்ஃபஹான் நகரங்களில் பலத்த வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஈரான் நேற்று இரவு இஸ்ரேலை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, நிலைமை மேலும் மோசமடையாமல் இருக்க உடனடி பதிலடி நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், அந்த கோரிக்கையை மீறி இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல்களின் பின்னர் பாதுகாப்பு காரணங்களால் தெஹ்ரான் சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவும் பதற்றமான சூழ்நிலையில், இந்த புதிய தாக்குதல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமையை மேலும் சிக்கலாக்கும் அபாயம் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
.jpeg)