கொழும்பில் அதிரடி சுற்றிவளைப்பு: 6 இலட்சம் போலி அமெரிக்க டொலர்களுடன் நால்வர் கைது!

 



கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, பெருமளவிலான போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து மொத்தமாக 600,000 அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

போலி நாணயங்கள் எவ்வாறு நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன, அவற்றை பயன்படுத்தி எந்தவொரு மோசடி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டனவா என்பது தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.