வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (07) முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
திக்கோடை சுவரணையடி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை சோதனையிட்ட பொலிஸார், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பிலான துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபரை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
.jpeg)