தலைமுடி ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், பொடுகு பிரச்சினையை குறைக்கவும் சில இயற்கை வீட்டு வைத்திய முறைகள் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
லெமன் மற்றும் தயிர் கலவை:
சற்று புளித்த தயிருடன் அரை எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் மிதமான ஷாம்புவால் குளித்தால், தலைமுடி மென்மையாக மாறுவதுடன் பொடுகு குறைய உதவலாம் என கூறப்படுகிறது.
வேப்பிலை மற்றும் எலுமிச்சை பேக்:
தலை அரிப்பு அல்லது சிறிய தோல் பிரச்சினைகள் உள்ளவர்கள் வேப்பிலையை அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால், அதிலுள்ள இயற்கை கிருமிநாசினி தன்மை பொடுகை ஏற்படுத்தும் பூஞ்சையை குறைக்க உதவலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சின்ன வெங்காய சாறு:
சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து தலையில் தடவி 15 நிமிடங்கள் வைத்துக் கழுவினால், அதிலுள்ள சல்பர் கூறுகள் பொடுகை குறைத்து முடி வளர்ச்சிக்கும் உதவலாம் என கூறப்படுகிறது.
.jpeg)