மும்பை நிகழ்ச்சியில் ஸ்ரீலீலாவுக்கு அவமதிப்பு?



 தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகை ஸ்ரீலீலா, இந்த ஆண்டு தமிழில் வெளியான “பராசக்தி” திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றிருந்தார்.

இந்நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மும்பையில் நடைபெற்ற பிரமாண்ட பொது நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் மற்றும் அவரது மகள் திவிஜா ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் போது, புகைப்படக் கலைஞர்களில் ஒருவர் திவிஜாவை மட்டும் தனியாக படம் எடுக்க வேண்டுமென கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அம்ருதா பட்னாவிஸ், நடிகை ஸ்ரீலீலாவை சற்று பின்வாங்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனவருத்தமடைந்த ஸ்ரீலீலா, நிகழ்வை விட்டு உடனடியாக வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் அம்ருதா பட்னாவிஸ் மற்றும் திவிஜா மட்டும் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, ஸ்ரீலீலாவுக்கு அவமதிப்பு ஏற்பட்டதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.